நிறுவனங்களில் கணினி வலையமைப்பின் பயன்பாடு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கணினி அமைப்புகள் கணினி வலையமைப்பு என அழைக்கப்படுகிறது. வலையமைப்பில் உள்ள கணினிகள் தரவு மற்றும் வளங்களை இலகுவாக பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு சிறந்த கணினி வலையமைப்பு என்பது வணிகத்திற்கு மிகவும் பயனளிக்கும் தீர்வாகும்.
நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்குள் பல கணினிகள் இணைக்கப்பட்டு வலையமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கணினி வலையமைப்பில் பங்கேற்போர்களிடையே விலையுயர்ந்த மென்பொருட்களையும் தரவுத்தளத்தையும் இலகுவாக பகிர்ந்து கொள்ள முடியும்.அதாவது வலையமைப்பில் உள்ள தனிப்பட்ட கணினிகள் ஒரு தனி உரிமத்தை நிறுவாமல் மென்பொருளின் நிகழ்வுகளை இயக்க முடியும். இன்று பல நிறுவனங்கள் விலையுயர்ந்த வன்பொருளைப் பகிர கூடிய இணைக்கப்பட்ட கணினிகளின் வலையமைபை பயன்படுத்துகின்றன. உதாரணமாக அச்சுப்பொறிகள் போன்ற வளங்களைப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இதன் மூலம் நிறுவனங்களில் வன்பொருள்களுக்காக செலவழிக்கும் பணத்தைக் குறைக்க முடியும்.
முக்கியமான வணிகத் தரவை மையப்படுத்தப்பட்ட இடத்தில் சேமிக்க இது அனுமதிக்கிறது. இதன் மூலம் நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் நிறுவனத்தின் தரவுத்தளங்களை தொலைவிலிருந்து அணுகலாம். கணினி வலையமைப்புகள் பல்வேறு வகையான வணிகங்களை ஆன்லைனில் பெருக்க வழி வகுக்கின்றன. நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பம் இருந்ததை விட கணினி வலையமைப்பு ஒரு முக்கிய அம்சமாகும்.
நிறுவனங்களில் கணினி வலையமைப்பின் பயன்பாடு பற்றிய கூடுதல் தகவலுக்கு இந்த பக்கங்களைப் பார்வையிடவும்

Comments
Post a Comment